Thursday, 13 June 2019

கொழுகொழு'னு இருந்த கீர்த்தி சுரேஷா இது..? புதிய தோற்றதால் ரசிகர்களால் அதிர்ச்சி


தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம்வரும் கீர்த்தி சுரேஷ், ஆள் அடையாளமே தெரியாத அளவிற்கு உடல் எடையை குறைத்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறார்.

ஒரு புறம் கேலி கிண்டல்களுக்கு ஆளானாலும், ராசியான நடிகை எனும் பெயரோடு முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு முன்னணி நடிகையாக கோலிவுட்டில் வலம்வருகிறார் கீர்த்தி சுரேஷ்.

பிற நடிகைகளை போல பிட்டான உடலமைப்புடன் இல்லை என்றாலும், கொழுமொழு தோற்றத்திலும் ரசிகர்களை கவர்ந்தார். சொல்லப்போனால் ரசிகர்களுக்கு அவரிடம் பிடித்ததே அந்த பப்ளி தோற்றம்தான்.

இப்படி இருக்க, நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் நடிக்கிறேன் என கூறிக்கொண்டு, தற்பொழுது கிடைத்துள்ள பாலிவுட் பட வாய்ப்புக்காக ஆள் அடையாளமே தெரியாத அளவிற்கு ஒல்லியாகி விட, ரசிகர்களோ காக்கா முட்டை பட வசனத்தை போல, 'இதுக்கு நம்ம பழைய கீர்த்தியே பரவாயில்லை' என புலம்பி வருகின்றனர்.


Disqus Comments
'