Friday, 21 June 2019

படம் தான் சுட்டதுன்னா, பர்ஸ்ட் லுக்கும் சுட்டதுதானா..? பிகில் திரைப்படம் குறித்து கிளம்பிய சர்ச்சை


பிகில் திரைப்பட பர்ஸ்ட் லுக் பிரபல தமிழ் திரைப்படத்தை பார்த்து காப்பி அடிக்கப்பட்டது என ஒரு சிலர் சர்ச்சையை கிளப்ப துவங்கி இருக்கின்றனர்.

வருகிற ஜூன் 22ம் தேதி (நாளை), நடிகர் விஜய் கோலாகலமாக தனது 45வது பிறந்தநாளை கொண்டாட இருக்கிறார். இதனையொட்டி அவரது 63வது படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் வெளியானது.

பெரும்பாலானவர்களை இந்த புகைப்படம் திருப்தி படுத்தியுள்ள நிலையில், அப்பா விஜய் கேத்தகா அமர்ந்திருக்கு பின்னால் மகன் விஜய் நிற்பது, கமல்-சிவாஜி நடித்த தேவர்மகன் திரைப்பட புகைப்படத்தை ஒத்து இருப்பதாக ஒரு தரப்பினர் சர்ச்சையை கிளப்ப துவங்கி இருக்கின்றனர்.



ஏற்கனவே அட்லீயின் இந்த பிகில் திரைப்படம் ஷாருக்கானின் 'சக்தே இந்தியா' திரைப்படத்தின் தழுவல் என ரீமேக் உரிமை வாங்கப்பட்டுள்ள நிலையில், இந்த பர்ஸ்ட் லுக் சர்ச்சையும் இணைந்து, 'படம் தான் சுட்டதுன்னா, பர்ஸ்ட் லுக்கும் சுட்டதுதானா' என கிசு கிசுக்க வைத்துள்ளது.   


Disqus Comments
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();