Thursday, 20 June 2019

நடிகையின் பின்னாலேயே சுற்றும் இயக்குனர்..! கடும் கோபத்தில் தயாரிப்பு நிறுவனம்


பிரபல தமிழ் திரைப்பட இயக்குனர் இருக்கும் வேலையை விட்டுவிட்டு நடிகையின் பின்னாலேயே சுற்றிவருவது தயாரிப்பு நிறுவனம் ஒன்றை கடும் கோபத்திற்கு ஆளாகியுள்ளது.

பல காதல் கண்ட நடிகையின் தற்போதைய காதலனாக வலம்வரும் இளம் இயக்குனர், காதலி செல்லும் இடங்களுக்கு எல்லாம் கூடவே செல்வதை வழக்கமாக்கி இருக்கிறார்.

இவர் இயக்கத்தில் படம் வெளியாகி கிட்டத்தட்ட ஒருவருட காலம் ஆகியும், புதிய படங்கள் எதையும் தொடங்காமலேயே இருக்கிறார். முன்னனி நடிகர் ஒருவரிடம் கதை கூறி ஓகே வாங்கியதுடன், பிரபல தயாரிப்பு நிறுவனத்தையும் பிடித்தார் இயக்குனர்.

அதோடு சரி, இன்னும் குறிப்பிட்ட படத்திற்கான திரைக்கதை கூட அமைக்காமல் காதலியுடன் ஊர் மட்டுமே சுற்றி வர, கோபத்திற்கு ஆளான தயாரிப்பு நிறுவனம், 'குறிப்பிட்ட தேதிக்குள் சரியான பதில் வரவில்லையென்றால் தாங்கள் படத்தில் இருந்து விலகிக்கொள்ள இருப்பதாக' இயக்குனருக்கு எச்சரிக்கை விடுத்தும் இருக்கிறது. 
Disqus Comments
'