Breaking News

விஷாலுக்கு எதிராக களமிறங்கும் சிம்பு?? சூடுபிடிக்கும் நடிகர் சங்க தேர்தல்


தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் வருகிற 23ம் தேதி நடைபெற உள்ளது. இம்முறை விஷால்-நாசர் அவர்களின் பாண்டவர் அணிக்கு எதிராக நடிகர் பாக்யராஜ் அவர்களின் சுவாமி சங்கரதாஸ் அணி போட்டியிட உள்ளது.

பாண்டவர் அணியிலிருந்து ஐசரிகணேஷ் உட்பட பலர் விலகி, பாக்யராஜ் அணியில் இணைந்துள்ளனர். இதனால் சுவாமி சங்கரதாஸ் அணி வலுப்பெற்று காணப்படும் நிலையில், மேலும் வலு சேர்க்க நடிகர் சிம்புவை பொருளாளர் பதவியில் நிற்க வைக்க முயற்சிகள் நடைபெற்றது.

ஆனால் சிம்புவோ உதவிகள் வேண்டுமானால் செய்கிறேன், பதவி வேண்டாம் என பெருந்தன்மையாக மறுத்து விட்டாலும், அவரது ஆதரவோடு வலுப்பெற்று நிற்கிறது.

இந்நிலையில் இத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று துவங்கி இருக்கிறது. பாண்டவர் அணி சார்பில் தலைவர் பதவிக்கு நாசரும்,  பொது செயலாளர் பதவிக்கு விஷாலும் போட்டியிடுகின்றனர்.

சுவாமி சங்கரதாஸ் அணியில், பாக்யராஜ் மற்றும் ஐசரி கணேஷ் ஆகியோர் தலைவர் பொது செயலாளர் பதவியில் போட்டியிட உள்ளனர். மேலும் சிம்புவுக்கு பதிலாக நடிகர் பிரசாந்த் பொருளாளர் பதவியில் அவ்வணிக்காக போட்டியிட இருக்கிறார்.