Saturday, 22 June 2019

மீண்டும் 'பாஜக'வை சீண்டும் விஜய்...! பர்ஸ்ட் லுக்கிலேயே இப்படின்னா..? எகிறும் எதிர்பார்ப்பு


ஏற்கனவே அவிங்களுக்கும் எங்களுக்கும் வாய்க்கா தகராறு எனும் திரைப்பட வசனம் நடிகர் விஜய்க்கும், ஆளும் கட்சிகளான பாஜக மற்றும் 'அதிமுக'விற்கும் நன்றாக பொருந்தும்.

தான் நடிக்கும் படங்களில் ஏதேனும் ஒரு காட்சியிலாவது, இந்த இருகட்சிகளில் ஒன்றை விஜய் விமர்சிப்பதும், இதனால் பட ரிலீஸின் போது பிரச்சனைகள் வெடிப்பதும்  வாடிக்கையாகி இருக்கிறது.

இதேபாணியை இப்பொழுது 'பிகில்' திரைப்படத்திலும் கையாண்டு இருக்கிறது, அத்திரைப்பட படக்குழு. குறிப்பிட்ட திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியாகி இருந்த நிலையில், அதில் இடம் பெற்றிருந்த ஒரு சில விஷயங்கள்தான் இப்படியொரு சர்ச்சையை கிளப்பி விட்டு இருக்கிறது.

அந்த போஸ்டரில் அப்பா விஜய், கழுத்தில் சிலுவை, நெற்றியில் குங்குமம், காவி வேஷ்டி என இந்து மற்றும் கிறிஸ்துவ மதங்களை கலந்தடித்து படு மாஸான தோற்றத்தில் காட்சி அளித்துள்ளார்.


ஏற்கனவே பாஜக கட்சியினர் நடிகர் விஐயை அவர் கிறிஸ்தவர் என்பதை காரணம் காட்டி விமர்சித்திருந்த நிலையில், இப்படியொரு லுக் கண்டிப்பாக அவர்களை சீண்டும் நோக்கத்திலேயே வைக்கப்பட்டு இருக்கலாம் என கிசு கிசுகின்றனர் சினிமா வட்டாரங்கள்.     
Disqus Comments
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();