Monday, 24 June 2019

'பிக்பாஸ்' வீட்டையும் விட்டு வைக்காத தண்ணீர் பஞ்சம்..! நைசாக பயன்படுத்தி கொண்ட கமல்


பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நேற்று கோலாகலமாக துவங்கி இருந்த நிலையில், சென்னையில் நிலவும் தண்ணீர் பஞ்சத்தை பிக்பாஸ் வீட்டிலும் காண முடிந்தது.

கடந்த 6 மாதங்களுக்கு பிறகு சில தினங்களாகத்தான் சென்னையில் லேசாக மழை பொழிந்து வருகிறது. இதன் காரணமாக நிலத்தடி நீர் மற்றும் நீர்நிலைகள் முற்றிலும் வற்றிவிட்டதனால், கடும் தண்ணீர் பஞ்சம் நிலவி வருகிறது.

தொடர்புடையவை : முதல் நாளிலேயே ஆளும்கட்சியை பந்தாடிய கமல்..! அரசியல் மேடையான பிக்பாஸ் மேடை 

லாரி தண்ணீர் விளையும் இரு மடங்காகிவிட்ட நிலையில், தண்ணீர் இன்றி காணப்பட்ட பிக்பாஸ் வீட்டின் நீச்சல் குளம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

இறுதி நேரத்தில் தண்ணீர் கிடைக்காததால் நீச்சல் குளங்கள் நிரப்பப்படாமல் இருக்க, அது குறித்து பேசிய கமலோ, 'வெளியே மக்கள் குடிக்க கூட நீரின்றி கஷ்டப்படும் போது, நாங்கள் மட்டும் குளிக்க நீச்சல் குளத்தை பயன்படுத்தினால் நன்றாக இருக்காது' என புத்திசாலி தனமாக பேசி சமாளித்து இருந்தார்.
Disqus Comments
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();