Thursday, 20 June 2019

டார்கெட் வைத்து தாக்கிய விஜய் ரசிகர்கள்..! நொறுங்கிப்போன 'நேர்கொண்ட பார்வை' சாதனை


சமூக வலைத்தளங்களில் விஜய், அஜித் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களின் பர்ஸ்ட் லுக் முதல், ட்ரைலர் ரிலீஸ் வரை ஒவ்வொன்றையும் ட்ரெண்ட் செய்யும் பழக்கத்தை வாடிக்கை ஆக்கி இருக்கின்றனர் ரசிகர்கள்.

இதன் மூலம் தாங்கள்தான் பெஸ்டு என கெத்து காட்டிக்கொள்ளும் ரசிகர்கள், பிற படங்களின் சாதனைகளை தகர்ப்பதிலும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

அப்படி நடிகர் அஜித்தின் நேர்கொண்ட பார்வை, ட்ரைலர் படைத்த ட்ரெண்ட் சாதனையை பக்கா ஸ்கெட்ச் போட்டு அடித்து நொறுக்கி இருக்கின்றனர் விஜய் ரசிகர்கள்.

அதாவது நேர்கொண்ட ட்ரைலர் குறித்து ஒரு நாளில் சுமார் ஆறு லட்சம் முறை ரசிகர்களால் பேசப்பட்டு இருந்தது, இந்த சாதனையை நடிகர் விஜயின் பிறந்தநாள் சிறப்பு புகைப்படம் குறித்த கலந்துரையாடல் வெறும் 20 மணி நேரத்தில் முறியடித்து சாதனையை தகர்த்திருக்கிறது. 
Disqus Comments
'