Monday, 10 June 2019

தளபதிக்கே கிடைக்காத மவுசு... தட்டி தூக்கிய தல..! வட இந்தியாவிலும் எகிறிய மார்க்கெட்


தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக இருந்தாலும், தென்னிந்தியாவை தாண்டி விஜய், அஜித் ஆகியோரின் பாச்சா வசூலில் எடுபடவில்லை. இவர்களது படங்களுக்கு ரஜினி படங்களை போல வட இந்தியாவில் வரவேற்பு கிடைப்பதில்லை.

இப்படி இருக்க, நடிகர் அஜித்துக்கான மவுசு பாலிவுட்டில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழில் பிளாப் ஆனாலும் விவேகம் திரைப்படம் பாலிவுட் ரசிகர்களை பெரும் அளவில் கவர்ந்தது.

அதன் பின்னர் அஜித்தின் படங்களை தேடி தேடி பார்க்க ஆரம்பித்து விட்டனர் ஒரு சில பாலிவுட் ரசிகர்கள். இப்பொழுது பாலிவுட் திரைப்படமான பிங்க் ரீமேக்கில் நடிப்பது, ஸ்ரீ தேவியின் கணவர் போனிகபூர் அதை தயாரிப்பது போன்ற செய்திகள் வட இந்தியாவில் மேலும் அவரை பிரபலப்படுத்தி இருக்கிறது.

இதனை பயன்படுத்தி கொள்ள நினைத்த தயாரிப்பாளர் போணிகபூர், நேர்கொண்ட பார்வை திரைப்படத்தை அடுத்து, H.வினோத் இயக்கும் திரைப்படத்தை தமிழ்-ஹிந்தி என இருமொழிகளில் உருவாக்க திட்டமிட்டு இருக்கிறார்.

இதன்மூலம் பாலிவுட்டிலும் நல்ல வசூலை அத்திரைப்படம் குவிக்கலாம் எனும் பட்சத்தில், ரஜினியை அடுத்து வசூல் சக்கரவர்த்தியாக திகழும்           நடிகர் விஜயின் பல சாதனைகள் முறியடிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.   
Disqus Comments
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();