Wednesday, 5 June 2019

எனக்கும் அவருக்கும் ஆகாது!!! அஜித்தை சாடிய வடிவேலு


தமிழ் சினிமாவின் அடையாளமாக இவரை கூறலாம் என சொல்லும் அளவிற்கு, நகைச்சுவையில் தலைசிறந்து விளங்குபவர் நடிகர் வடிவேலு.

அரசியல் சர்ச்சை காரணமாக திரையுலகில் சிறு இடைவெளி விழுந்தாலும், மீம்ஸ் வழியாக தினம் தினம் கோடிக்கணக்கான மக்களை சிரிக்க வைத்து கொண்டுதான் இருக்கிறார்.

இவரது காண்டிராக்டர் நேசமணி கதாபாத்திரம் உலக அளவில் ட்ரெண்ட் ஆன பிறகு, ரசிகர்களுக்காக நேர்காணல் மூலமாக தரிசனம் அளித்த அவர், திரைத்துறை பயணத்தில் தான் சந்தித்த பிரச்சனைகள் குறித்து பேசி இருந்தார்.

அதில், 'சில நடிகர்களுக்கு இயல்பாக பழகுவது பிடிக்காது. ஒரு முன்னணி நடிகர் நான் படப்பிடிப்பில் 'வாடா போடா' என அழைத்தேன் என்பதற்காக பிரச்சனை செய்தார்' என மறைமுகமாக குறிப்பிட்டு இருந்தார்.

அதாவது, 'ராஜா' திரைப்பட படப்பிடிப்பின் போது அஜித்திற்கு தனக்கும் ஏற்பட்ட மனக்கசப்பை தான் வடிவேலு அந்த நேர்காணலில் பகிர்ந்து இருக்கிறார் என்கிறது தமிழ் திரையுலகம். அந்த திரைப்படத்திற்கு பின்பு இருவரும் எந்த ஒரு திரைப்படத்திலும் இணைந்து நடிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Disqus Comments
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();