Saturday, 8 June 2019

'ரஜினி-விஜய்' சாதனைகளை ஓரம்கட்டும் அஜித் - குவியப்போகுது வசூல்


தமிழ் சினிமாவின் வசூல் சக்கரவர்திகளான விஜய், ரஜினி, அஜித் ஆகியோரின் படங்கள், அவர்களின் சம்பளத்தை போலவே, மிரள வைக்கும் தொகையை வசூல் செய்து விடும்.

இப்படி இருக்க தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ள புதிய வேலை நேர கொள்கையின் படி இந்த தொகையானது பல மடங்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதாவது, தமிழகத்தில் இனி 24மணி நேரமும் கடைகள் இயங்கலாம் என தமிழக அரசு அண்மையில் அரசாணை விதித்தது. இதன் படி திரையரங்குகளும் இனி 24 மணி நேரமும் இயங்கும்.

இதன் மூலம் கூடுதலாக இரு காட்சிகள் அல்லது அதற்கு மேலும் திரையிடப்படலாம்  எனும் நிலையில், வார வசூலை நம்பி இருக்கும் தமிழ் சினிமா படங்கள் வழக்கத்தை விட கூடுதலாக வசூல் செய்ய முடியும்.

அதிலும் குறிப்பாக அஜித், விஜய், ரஜினி போன்ற நடிகர்களின் படங்களுக்கு எப்பொழுது வேண்டுமானாலும் கூட்டம் அலைமோதும் என்கிற காரணத்தினால் இவர்களின் பட வசூல் எகிற போவது உறுதி.

இந்த உச்ச நடிகர்களில், அஜித்தின் 'நேர்கொண்ட பார்வை' திரைப்படம் ஆகஸ்ட் மாதம் வெளியாக உள்ள நிலையில், இந்த வசூல் வேட்டையை முதலில் ருசிப்பவர் அவராகத்தான் இருக்க முடியும் என்கிறது சினிமா வட்டாரங்கள்.

மேலும், இதன்மூலம் தமிழ் சினிமாவின் முந்தைய வசூல் சாதனைகளும் தற்காலிகமாக முறியடிக்கப்படலாம் என்ற பேச்சும் தற்பொழுது அடிபட துவங்கியுள்ளது.  

Disqus Comments
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();