Thursday, 13 June 2019

நயன்தாரா ஆக நினைத்து நாசமா போயிட்டேன்..! புலம்பும் இளம் நடிகை


அரசனை நம்பி புருஷனை கைவிட்ட கதையாக, நயன்தாரா போல ஆக நினைத்து படவாய்ப்புகளை இழந்து தவிக்கிறார் முன்னணி நடிகை ஒருவர்.

தமிழ் சினிமாவில் நடிகர்களில் உச்சம் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் என்றால், நடிகைகளில் அது லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தான். அதனால் தற்பொழுது சினிமாவிற்கு வரும் இளம் நடிகைகள் அனைவருக்கும் அவர் தான் ரோல் மாடல்.

அப்படி, நடிகை நயன்தாராவின் வழித்தடத்தை திரைத்துறையில் பின்பற்றி வந்தவர் சிரிப்புக்கு பெயர் போன இளம் நடிகை ஒருவர்.

நாயகிக்கு முக்கியத்துவம் கொண்ட திரைப்படத்தில் நடித்து அனைவரையும் பிரமிக்க வைத்த நம் சிரிப்பழகிக்கு, அதே போல பல திரைப்பட வாய்ப்புகள் வந்து குவிந்தன.

ஆனால் நடிகையோ, ஆரம்பத்தில் நயன்தாரா நடித்தது போல நடிகர்களை சுற்றி வந்து காதலிக்கும் வேடங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து விட்டு, கொஞ்சம் வயதானவுடன் நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் நடிக்கிறேன் என வந்த வாய்ப்புகளை தவற விட்டார்.

விளைவு, அவர் நடித்த சமீபத்திய திரைப்படங்களில் அவரது கதாபாத்திரம் ரசிகர்களை கவர தவறவே, தற்பொழுது எந்த படவாய்ப்பும் இன்றி புலம்பி வருகிறார்.  
Disqus Comments
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();