Breaking News

தளபதி-63 : அட்லீ படத்தில் இணைந்த விஜய் மகன்...! அனல் பறக்கும் அப்டேட்

Vijay Son On Thalapathy 63 

நடிகர் விஜயின் மகனான சஞ்சய், தளபதி 63 படத்தில் இணைந்திருக்கும் தகவல் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

வேட்டைக்காரன் திரைப்படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு தந்தையுடன் நடனமாடி தனது திரைத்துறை அறிமுகத்தை நிகழ்த்தி இருந்தவர் சஞ்சய். அதன் பின்னர் படிப்பில் முழு கவனம் செலுத்தி வரும் அவர், தளபதி 63 படத்திற்காக மீண்டும் திரைத்துறையில் அடியெடுத்து வைக்கிறார்.

இது குறித்து சமீபத்தில் அவர் வெளியிட்ட சமூக வலைதள பதிவில், 'டப்பிங் துவங்கியது' என thalapthi 63, ArRahman எனும் ஹாஸ்டாக்குகளுடன் பதிவிட அட்லீ படத்தில் அவர் இருப்பது தெரியவந்துள்ளது.



அதே சமயம் இசையமைப்பாளர் AR ரஹ்மானும், சஞ்சயின் காணொளி ஒன்றினை வெளியிட இந்த தகவல் உறுதியாகியுள்ளது. இதனால் அவர் இத்திரைப்படத்தில் பாடல் ஒன்றிலும் தன் குரலை பதிவு செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.