Breaking News

யூட்யூபை கலக்கும் 'மெர்சல்' - 2 வருடங்களுக்கு பின்னும் குறையாத மவுசு..!


அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்த மெகா ஹிட் திரைப்படம் மெர்சல். சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன் என மூன்று கதாநாயகிகளுடன் மூன்று வேடங்களில் விஜய் நடித்த இந்த திரைப்படம், சர்வதேச அளவில் விருதுகளை வென்றது.

இத்திரைப்படம் கடந்த 2017ம் ஆண்டு வெளியாகி இருந்த நிலையில், இதன் தெலுங்கு டப் வெர்சன் தற்பொழுது யூட்யூபில் வெளியாகி உள்ளது. வெளியான வெறும் நான்கே நாட்களில் சுமார் 4 மில்லியன் பார்வைகளை கடந்து வைரலாகி வரும் நிலையில்,

தெலுங்கு ரசிகர்களிடையேயும் விஜய் படத்திற்கு கிடைத்த இந்த வரவேற்பை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.