Thursday, 20 June 2019

அண்ணாச்சினா அண்ணாச்சி தான்யா...! ஒரே பதிலால் கோலிவுட்டையே கொண்டாட வைத்த சரவணன்


'பெஸ்டு.. பெஸ்டு' என தனது கடை விளம்பரங்களில் மட்டும் பாடிக்கொண்டிருந்தவரை நிஜத்திலும் 'நீங்கள் பெஸ்டுதான்', என கோலிவுட்டையே புகழ் பாட வைத்திருக்கிறார் சரவணா ஸ்டோர் பாடி கிளையின் உரிமையாளர் சரவணன் அருள்.

என்னதான் கேலி கிண்டல்களுக்கு ஆளானாலும் தனது கடை விளம்பரங்களில் தமன்னா, ஹன்சிகா போன்ற நடிகைகளுடன் தன்னம்பிக்கையுடன்  நடனமாடி புகழ் பெற்றவர் சரவணன்.


இந்த பிரபலத்தால் விரைவில் 'லெஜெண்ட் நம்பர் ஒன்' என்ற திரைப்படத்திலும் நாயகனாக அறிமுகமாக இருக்கிறார். JD-ஜெர்ரி ஆகியோர் இணைந்து இயக்க இருக்கும் இந்த திரைப்படத்தை தானே தயாரிக்கவும் உள்ளார்.

இத்திரைப்படம் குறித்த தகவல் வெளியானதும், அண்ணாச்சிக்கு இருக்கும் பிரபலத்தை மனதில் கொண்டு, பல தயாரிப்பு நிறுவனங்கள் 'தாங்கள் தயாரிக்க தயார்' என வரிசையில் நின்றனர்.

ஆனால் சரவணனோ, 'என்னை வைத்து படம் தயாரிக்க நினைத்த உங்களுக்கு நன்றி. படம் எப்படி போகும், லாபம் ஈட்டுமா என்பது பற்றி எனக்கு தெரியாது. ஒருவேளை நன்றாக செல்லாவிட்டால் என்னால் யாரும் நஷ்டப்பட வேண்டாம்.

இந்த படத்தை நானே என் செலவில் தயாரித்து கொள்கிறேன். பட விநியோகத்தில் உங்கள் உதவி எனக்கு கண்டிப்பாக தேவை', என கூறி பலரையும் வியப்பில் ஆழ்த்திவிட்டாராம்.

    
Disqus Comments
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();