Breaking News

சொன்னதை செய்து காட்டிய போனி..! பாலிவுட்டில் தல அஜித்


தமிழ் சினிமாவில் எக்கச்சக்க ரசிகர் பட்டாளத்தை உடைய நடிகர் அஜித். இவர் பாலிவுட் வந்தால் அங்கேயும் வெற்றிகரமான நடிகராக வலம்வருவார் என்பது பல பாலிவுட் பிரபலங்களின் கருத்து. இதே கருத்தை தயாரிப்பாளரும் நடிகை ஸ்ரீதேவியின் கணவருமான போனிகபூர் தெரிவித்து இருந்தார்.

'நடிகர் அஜித் பாலிவுட் வரவேண்டும், அப்படி அவர் வந்தால் அவருக்காக மூன்று கதைகள் தயாராக வைத்து இருக்கிறேன்' என அவர் தெரிவித்திருந்தால் நடிகர் அஜித்திடம் இருந்து ஒப்புதல் ஏதும் வந்தபாடில்லை.

இப்படி இருக்க, நாசுக்காக வேலை செய்து நடிகர் அஜித்தை நைசாக பாலிவுட் பக்கம் போனிகபூர் இழுத்து இருப்பதாக ஒரு தகவல் வலம்வருகிறது. அதாவது நேர்கொண்ட பார்வை திரைப்படத்தை அடுத்து, மீண்டும் H.வினோத் உடன் அஜித் இணையும் 'தல60' திரைப்படமானது ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் ஹிந்தி மொழிகளில் உருவாக இருக்கிறதாம்.   

இது உண்மையாக இருக்கும் பட்சத்தில், நேரடி ஹிந்தி படமாகவும் இத்திரைப்படம் வெளியாகும். இதனால் நடிகர் அஜித்தை பாலிவுட்டிலும் காலடி எடுத்துவைக்க வைத்த பெருமை போனிகபூரை சாரும். முன்னதாக விவேகம் திரைப்படத்தின் ஹிந்தி டப், பாலிவுட் ரசிகர்களை பெரும் அளவில் கவர்ந்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.