Breaking News

தமிழ் நாட்டிலேயே தமிழுக்கு மரியாதை இல்லை!!! காமெடி நடிகரின் செருப்படி பதிவு


தமிழ் நாட்டிலேயே தமிழை மதிப்பதில்லை என காமெடி நடிகர் சதீஸ் தனது ஆதங்கத்தை தெரிவித்து இருக்கிறார்.

மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு, தமிழர்கள் பல விதங்களில் பழிவாங்கப்படுவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டு வருகிறது. ATMகள், இரயில் நிலையங்கள், ஏன் தமிழக மைல் கற்களில் இருந்து கூட தமிழ் நீக்கப்பட்டு வருகிறது.

இப்படி இருக்க தமிழக விமான நிலையங்களிலும் தமிழ் உபயோகிக்கப்படுவது இல்லை என்கிற விஷயத்தை மிகுந்த ஆதங்கத்தோடு தெரிவித்து இருக்கிறார் நடிகர் சதீஸ்.

இது குறித்துஅவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், 'இலங்கை போன்ற பிற நாடுகளில் கூட விமான நிலையங்களில் தமிழில் அறிவிப்பு செய்கின்றனர். ஆனால் தமிழக விமான நிலையங்களில் தமிழ் உபயோகிப்படுவது இல்லை. வசதிக்காக மட்டும் இல்லை உரிமைக்காகவும் கேட்கிறோம்' என குறிப்பிட்டு இருக்கிறார்.