Friday, 10 May 2019

யார் சொன்னது அஜித்துக்கு மவுசு இல்லனு??? மாபெரும் சாதனையின் மூலம் கெத்து காட்டிய தல!!!


பெரும்பாலும் நடிகர் அஜித்தின் படங்கள் இளசுகளை கவரும்படி அமைந்திருந்தாலும், சிவா இயக்கத்தில் உருவான விஸ்வாசம் திரைப்படம் அந்த வழக்கத்தை மாற்றி இருந்தது.

6 முதல் 60வரை அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்த அத்திரைப்படம், தொலைக்காட்சிகளில் அஜித் படங்கள் ஒளிபரப்பானால் மக்களிடையே கிடைக்கும் வரவேற்பு, விஜய் திரைப்படங்களை விட குறைவுதான் என்கிற மற்றொரு எழுதப்படாத விதியையும் மாற்றி காட்டி இருக்கிறது.

கடந்த மே 1ம் தேதி உழைப்பாளர் தின ஸ்பெஷலாக விஸ்வாசம் திரைப்படம் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. குறிப்பிட்ட தினத்தன்று அந்த திரைப்படத்தை பார்த்தவர்களின் எண்ணிக்கை வரலாறு காணாத அளவிற்கு உச்சத்தை தொட்டு சாதனை படைத்தது இருக்கிறது.

அதாவது, சுமார் 1,81,43,000 மக்களால் விஸ்வாசம் கண்டுகளிக்கப்பட்டு உள்ளது. மேலும் தனது எந்த திரைப்படம் திரையிடப்பட்டாலும், TRP ரேட்டிங்கை எகிற செய்து விடும் நடிகர் விஜயின் சர்க்கார் திரைப்படமோ 1.69,00,000 பார்வையாளர்களுடன் நான்காவது இடத்தில்  இருப்பதும் குறிப்பிடத்தக்கது.


Disqus Comments
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();