Thursday, 30 May 2019

'விஜய்-அஜித்' படங்களுக்கு வந்த புதிய ஆப்பு!!! தயாரிப்பாளர்கள் அதிர்ச்சி


விஜய் அஜித் போன்ற முன்னணி நடிகர்களின் படங்கள் தயாரிப்பாளர்களுக்கு நல்ல லாபத்தை கொடுத்தாலும், தியேட்டர் உரிமையாளர்கள் பெரும்பாலும் நஷ்டத்தையே சந்திப்பதாக ஒரு குற்றச்சாட்டு இருந்து வந்தது.

இப்படியொரு நிலையை மாற்றும் விதமாக, தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் ஒரு புதிய கொள்கை நடைமுறை படுத்தப்பட்டு உள்ளது. முன்னதாக திரைப்படங்களின் நாயகர்களுக்கு உள்ள மவுசு அடிப்படையில், விநியோகஸ்தர்கள்-தியேட்டர் உரிமையாளர்களிடையே திரைப்படங்களின் வசூல் பங்கிடப்பட்டு வந்தது. 

விநியோகஸ்தர்களுக்கு மட்டும் அதிகம் லாபம் கிடைக்கும்படி இருந்து வந்த இந்த நடைமுறையை மாற்றி, கீழே கொடுக்கப்பட்டுள்ளபடி ஒரு நிலையான வசூல் பங்கீடு முறையை தியேட்டர் உரிமையாளர்கள் அமலுக்கு கொண்டு வந்து உள்ளனர்.



வரிவிதிப்பு, பராமரிப்பு செலவு, வேலையாட்கள் கூலி உயர்ந்துள்ள நிலையில் பழைய பங்கீடு முறை தங்களுக்கு லாபகரமாக இல்லை எனக்கூறி, தியேட்டர் உரிமையாளர்கள் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது.

இந்த முடிவினால், விஜய் அஜித் ரஜினி படங்களுக்கு தங்கள் இஷ்டப்படி வசூலில் பங்கு கேட்டு கொள்ளை லாபம் பார்த்து வந்த விநியோகஸ்தர்கள்  கடும் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.
Disqus Comments
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();