Breaking News

'தளபதி 63' வெற்றி உறுதி!!! விஜய் போட்ட மாஸ்டர் பிளான்


100, 200 என தியேட்டர்களில் திரைப்படங்கள் ஓடிய காலம் போய், 1 வாரம் நீடிப்பதே பெரிது எனும் நிலை வந்துவிட்டது. போதாத்தைக்கு நெகட்டிவ் விமர்சனங்களும் வந்து வினையாக முடிந்து விட, பல படங்கள் வசூலில்  தோல்வியையும், நஷ்டத்தையும் தழுவி விடுகின்றன.

சாதாரண நடிகர்களின் படங்களே இப்படி என்றால், விஜய், அஜித் போன்ற பெரும் ரசிக, விமர்சன பட்டாளத்தை கொண்ட நடிகர்களை பற்றி சொல்லவே வேண்டாம்.

இந்த ரசிகர்கள் நினைத்தால், ஒரு நல்ல திரைப்படத்தையும் எதிர்மறை விமர்சனங்களால் பிளாப் ஆக்கிவிட முடியும் எனும் நிலையில், தனது அடுத்த படத்தில் இது போன்ற பிரச்சனையை தவிர்க்க, நடிகர் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் பற்றிய தகவல் வெளிவந்துள்ளது.

பெரும்பாலும் இது போன்ற பட தோல்வி குறித்த விமர்சனங்களை பேச ஆரம்பிப்பது, படத்தை வாங்கும் விநியோகஸ்தர்கள் தான். இவர்களின் வழியே தான் படவசூல் குறித்த தகவல்களும் இணையதள விமர்சகர்களையும் சென்றடைகிறது.

இதனால், ஆரம்பகட்டத்திலேயே எதிர்மறை விமர்சனங்கள் தியேட்டர் வருபவர்களின் எண்ணிக்கையை குறைத்து விடாமல் இருக்க, 'தமிழ் நாடு தியேட்டரிக்கல் உரிமையை விற்பனை செய்யாமல், நீங்களே வெளியிட வேண்டும்' என்ற கட்டளையை 'தளபதி 63' திரைப்படத்தினை தயாரிக்கும் AGS நிறுவனத்திற்கு விதித்து இருக்கிறாராம் விஜய்.