Breaking News

'சன் டிவி' எட்டிய புதிய மைல் கல்!!! குவியும் வாழ்த்துக்கள்


சன் குழுமத்தின் டிவி சேனல்கள், தமிழக மக்களுக்கு டிவி என்ற சாதனம் அறிமுகமான சில ஆண்டுகளிலேயே துவங்கப்பட்டவை. சன் டிவி, கே டிவி, சன் ம்யூசிக் என அனைத்து வகை டிவி சேனல்களுக்கும் பிள்ளையார் சுழி போட்ட முதன்மை நிறுவனமான இது, இந்தியாவிலேயே முதல் செய்தி சேனலை கடந்த 1999ம் ஆண்டு நிறுவி இருந்தது.

இப்படி 'இந்தியா முழுவதும் இருக்கும் ஆயிரக்கணக்கான செய்தி சேனல்களுக்கு முன்னோடி' எனும் பெருமையை கொண்ட சன் நியூஸ் சேனல் நேற்று தனது 20வது ஆண்டில் அடியெடுத்து வைத்தது.

இதற்கான கொண்டாட்டங்களும், சன் குழுமத்தின் சார்பில் நடைபெற்று இருந்த நிலையில், ரசிகர்கள் சினிமா பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.