Breaking News

சிம்புவுக்கு இருக்கும் பெருந்தன்மை நயனுக்கு இல்லையே??? வருத்தத்தில் திரையுலகம்


நயன்தாரா மற்றும் சிம்பு இடையிலான காதல் முறிவு ஊர் அறிந்த ஒன்று. அவரை அடுத்து நயன்தாராவும், பிரபுதேவா, விக்னேஷ் சிவன் என அடுத்தடுத்த காதல்களை சந்தித்து விட்டார்.

அதுமட்டுமல்லாது, மீண்டும் சிம்புவுடன் இணைந்து 'இது நம்ம ஆளு' என்கிற படத்திலும் நடித்து, பழசை மறந்து நல்ல நண்பர்களாகி விட்டதாகவும் பேசப்பட்டது.

இப்படி இருக்க இப்பொழுது சிம்புவுக்கு கிடைக்க இருந்த மாபெரும் திரைப்பட வாய்ப்பை இழக்க செய்து, 'லேடி சூப்பர் ஸ்டாரா இப்படி செய்தது?' என திரைத்துறையினரை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறார்.

தமிழ் சினிமாவின் புகழ்பெற்ற இயக்குனர் மணிரத்தினம் அவர்கள், ஒரு மாபெரும் நடிக பட்டாளத்துடன் 'பொன்னியின் செல்வன்' கதையை திரைப்படமாக எடுக்க இருக்கிறார்.

அதில் சிம்புவையும் நடிக்க அழைத்திருந்த மணிரத்னம் அவர்கள், 'திடீரென தயக்கத்துடன் நீங்கள் இந்த திரைப்படத்தில் நடிக்க வேண்டாம்' என கூறி, அதன் பின்னணியில் இத்திரைப்படத்தின் நாயகிகளில் ஒருவரான நயன்தாரா இருப்பதையும் தெரிவிக்க,

நடிகர் சிம்புவோ 'இதனால் நீங்கள் கவலை பட வேண்டாம். எனக்கு துளியும் வருத்தம் இல்லை. நீங்கள் எப்பொழுது அழைத்தாலும் நான் நடிக்க தயார்' என பெருந்தன்மையுடன் இயக்குனரின் முடிவை ஏற்றுக்கொண்டு இருந்தாராம்.