Breaking News

வாய்ப்புகள் பறிபோனதால் கேவலமாக திட்டுகிறார்!!! புஸ்பவனம் குப்புசாமியின் மேல் எழும் விமர்சனம்


பிரபல நாட்டுப்புற பாடகரான புஸ்பவனம் குப்புசாமி அவர்கள், சூப்பர் சிங்கர் பிரபல செந்தில் கணேஷ் அவர்களை சமீபத்திய நேர்காணல் ஒன்றில் படு மோசமாக விமர்சித்து பரபரப்பை கிளப்பி இருந்தார்.

மேடையில் இரட்டை அர்த்த வசனத்தில் பேசுகிறார், மனைவியை அருகில் வைத்து கொண்டே மற்றொரு பெண்ணுக்கு சிக்னல் கொடுக்கிறார் என மேடை நிகழ்ச்சிகளில் பொழுது போக்கிற்காக செய்யும் விஷயங்களை குறையாக கூறி இருந்தார் குப்புசாமி.

இந்நிலையில் இவரது இந்த திடீர் விமர்சனத்திற்கு, நாட்டுப்புற பாடல்களை கோவில் திருவிழாக்களில் பாட அதிகம் வந்த வாய்ப்புகள், சூப்பர் சிங்கர் பிரபலத்திற்கு பின்பு செந்திகணேசுக்கு சென்றது காரணமாக கூறப்பட்டு வருகிறது.

மேலும் இந்த விமர்சனத்திற்கு 'இவ்வளவு நேர்த்தியை எதிர்ப்பார்க்கும் நீங்கள் மட்டும் 'அப்பன் பண்ண தப்புல ஆத்தா பெத்த வெத்தல' என அசிங்கமாக பாடலாமோ என பதிலடியும் கொடுத்து வருகின்றனர் செந்தில்கணேஷ் ரசிகர்கள்.