Saturday, 11 May 2019

தன்னை திட்டியவர்களுக்கு இப்படியொரு பதிலடியா? சூப்பர் ஸ்டார், சூப்பர் ஸ்டார் தான்!!!


தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரமான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தன்னை விமரசிப்பவர்களை கையாளும் முறை குறித்து மனம் திறந்து இருக்கிறார் நடிகர் ராகவா லாரன்ஸ்.

நடிகர் ரஜினிகாந்த், முழுக்க முழுக்க ஒருவருக்கும் தீங்கு நினைக்காத மாமனிதர். விளம்பரத்திற்காக அவரை பற்றிதான் நிறைய பேர் தப்பாக பேசுவார்கள். இது குறித்து உரிமையுடன் அவரிடம் ஒருமுறை,

'நீங்கள் மேடையில் பேசினால் அனைவரையும் புகழ்ந்து தான் பேசுகிறீர்கள். ஆனால் அவர்கள் அப்படியில்லையே, உங்களை தான் விமர்சனம் செய்கிறார்கள், நீங்களும் எதுவும் சொல்வதில்லையே?' என கேட்டேன்.

அதற்கு அவர், 'விடுங்கள் பேசுபவர்கள் பேசிவிட்டு போகட்டும். அனைத்தையும் ஆண்டவர் பார்த்து கொள்வார்' என பெருந்தன்மையுடன் பதிலளித்து நெகிழ வைத்துவிட்டார்' என தெரிவித்து இருந்தார்.


Disqus Comments
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();