Breaking News

பாடகி 'எஸ்.ஜானகி' மருத்துவமனையில் அனுமதி!!! அதிர்ச்சியில் திரையுலகம்


திரையுலகின் மூத்த பாடகியான எஸ்.ஜானகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இதுவரை 48,000 பாடல்களுக்கு மேல் தனது குரலை பதிவு செய்த மாபெரும் பாடகி எஸ்.ஜானகி. குழந்தை குரலிலும் பாடும் திறமை கொண்டவரான இவருக்கு இப்பொழுது 81 வயதாகிறது.

சில ஆண்டுகளுக்கு முன்பே பாடுவதை நிறுத்திக்கொண்ட இவர், குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் உறவினர் ஒருவரது வீட்டிற்கு சென்றிருந்த இவர், குளியலறையில் வழுக்கி விழுந்ததாக தெரிகிறது.

இதனால் முதுகெலும்பு உடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். இந்த தகவல்  அறிந்து பரபரப்பான திரையுலகம்  சில வார சிகிச்சைக்கு பின்பு, அவர் வீடு திரும்பிய தகவல் அறிந்து நிம்மதி பெருமூச்சு விட்டிருக்கிறது.