Breaking News

ரஜினியும் நீங்களும் ஒண்ணா??? அஜித்தின் புதிய சம்பளத்தால் புலம்பும் தயாரிப்பாளர்கள்


தமிழ் சினிமாவில் படத்தின் பட்ஜெட்டின் பெரும்பகுதி முன்னணி நடிகர்களுக்கு சம்பளமாக சென்று விடும். இதனால் நடிகர்கள் தங்களது சம்பளத்தை குறைத்து கொள்ளவேண்டும் என பலமுறை திரைத்துறையினர் கோரிக்கை வைத்ததும் உண்டு.

என்றாலும் நடிகர்கள் சம்பள விஷயத்தில் விட்டுக்கொடுப்பதாக இல்லை. விஜய், ரஜினி, அஜித் என முன்னணி நடிகர்களின் சம்பளத்தை கேட்டால் தலையே சுற்றிவிடும். அந்த அளவிற்கு அவர்களின் படங்களுக்கு மவுசு உள்ளது என்பதும் கருத்தில் கொள்ளவேண்டிய ஒன்று.

என்றாலும், பிறரை காட்டிலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு உலக அளவில் ரசிகர்களிடையே மவுசு உள்ளது. இதன் காரணமாக தமிழ் சினிமாவிலேயே அதிக சம்பளம் பெரும் நடிகராக உச்சத்தில் இருக்கிறார்.

இப்படி இருக்க, இவரை அடுத்து அதிக மவுசுள்ள நடிகர்களான அஜித் மற்றும் விஜயும் ரஜினிக்கு இணையாக சம்பளம் கேட்க துவங்கி இருப்பது தயாரிப்பாளர்களை கலங்க வைத்திருக்கிறது.

நடிகர் அஜித், நேர்கொண்ட பார்வை திரைப்படத்தை அடுத்து, வினோத்தின் இயக்கத்தில் மற்றொரு திரைப்படம் நடிக்கிறார். இதற்கு அடுத்த திரைப்படம் குறித்த பேச்சுவார்த்தையும் நடைபெற்று வரும் நிலையில், தயாரிப்பாளர்களை 60 கோடி சம்பளம் கேட்டு அஜித் மிரள வைத்திருப்பதாக ஒரு தகவல் வலம்வருகிறது.

இறுதியாக வெளிவந்த விஸ்வாசம் திரைப்படத்தில் 35 கோடி ரூபாயை அஜித்  சம்பளமாக பெற்றிருந்தார். பேட்ட திரைப்படத்தில் ரஜினியின் சம்பளம் 65 கோடி.

இப்படி மளமளவென ரஜினிக்கு இணையாக அஜித் சம்பளம் கேட்க துவங்கி இருப்பது, உலக மார்க்கெட் கொண்ட 'ரஜினியும் நீங்களும் ஒண்ணா?' என தயாரிப்பாளர்களை கேள்வி எழுப்ப செய்துள்ளது.