Breaking News

கோடி ரூபாய் கொடுத்தாலும் அதில் நடிக்க மாட்டேன்! சிவகார்த்திகேயனின் கண்டிசனால் மெர்சலான திரையுலகம்


காசு என்றால் நிர்வாணமாக கூட நடிக்க ரெடி என பல பிரபலங்கள் தயாராக இருக்கும் நிலையில், நடிகர் சிவகார்த்திகேயனின் பாலிசி பலரையும் பாராட்ட வைத்துள்ளது.

சின்னத்திரை நிகழ்ச்சி தொகுப்பாளராக தனது பயணத்தை துவங்கி, இன்று முன்னணி நட்சத்திரம் எனும் இடத்திற்கு தனது கடின உழைப்பால் உயர்ந்திருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன்.

புகை,மது என எந்த வித கெட்டபழக்கமும் இல்லாத ஒருவரான இவர், தன்னைப்போலவே தனது ரசிகர்களுக்கும் இருக்க வேண்டும் என்பதில் கவனமாக இருந்து இருந்துவருகிறார்.

உடலுக்கு தீங்கு விளைவிக்கும் நொறுக்குத்தீனி, குளிர்பான விளம்பரங்கள் துவங்கி இப்பொழுது, திரைப்படங்களிலும் புகைப்பிடிப்பது, மது அருந்துவது போன்ற காட்சிகளில் நடிக்க மறுத்து வருகிறார்.

தற்பொழுது சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன் போன்ற மது, புகைப்பிடிக்கும் காட்சிகளுக்கு பெயர் போன படங்களை இயக்கிய ராஜேஷின் இயக்கத்தில் மிஸ்டர் லோக்கல் எனும் திரைப்படத்தில் நடித்து இருக்கிறார்.

இந்த திரைப்படத்திலும், மது அருந்தும் காட்சி ஒன்று படமாக்கப்பட இருந்த நிலையில், கண்டிப்பாக இதில் நடிக்க மாட்டேன் என உறுதியாக இருந்து அந்த காட்சியையும் மாற்ற வைத்து இருக்கிறார்.