Breaking News

விஜயை பயந்து நடுங்க வைத்த ரசிகர் - வைரலாகும் வீடியோ


தமிழ் சினிமாவின் மாபெரும் ரசிகர் பட்டாளத்தை உடைய நடிகர்களுள் விஜயும் ஒருவர். இதன் காரணமாக இவரது படப்பிடிப்பு பகுதியில் ரசிகர்கள் கூட்டம் அலைமோதும்.

இதனால் ஏற்படும் இடையூறுகளையும் கண்டுகொள்ளாது, தமிழ் சினிமா ஊழியர்கள் பயன்பெற தொடர்ந்து தன் திரைப்படங்களை தமிழகத்திலேயே படமாகும் படி செய்திருக்கிறார்.

Also Read | '44' வயதிலும் விஜய் பிட்டாக இருக்க இதுதான் காரணம்.! பிரபலம் வெளியிட்ட தகவல் 

என்றாலும் ஒரு சில சமயங்களில் ரசிகர்கள் எல்லை மீறும் செயல்களினால், சச்சரவுகள் ஏற்படத்தான் செய்கிறது. சில நாட்களுக்கு முன்பு 'விஜய் - அட்லீ' திரைப்பட படப்பிடிப்பில் குவிந்த ரசிகர் வேலி சரிந்து விபத்துக்கு ஆளானார்கள். அதனை நடிகர் விஜய் தாங்கிப்பிடித்த காணொளிகளும் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆனது.

இந்நிலையில், சமீபத்தில் வெளியாகியுள்ள மற்றொரு வீடியோவில், படப்பிடிப்புக்கு வரும் நடிகர் விஜயை ரசிகர்கள் சூழ்ந்துகொள்ள, எதிர்பாராத விதமாக அவரை கட்டிப்பிடிக்க பாயும் ரசிகர் ஒருவரால் ஒருகணம் திடுக்கிடும் காட்சிகள் இடம்பெற்று உள்ளது.


இதனால் என்னதான் மாபெரும் அன்பு வைத்திருந்தாலும், இது போன்று இடையூறுகள் செய்வது முறையல்ல என குறிப்பிட்ட ரசிகரை, பிற விஜய் ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.