Breaking News

நீங்க இதுக்கு சரிப்பட்டு வரமாட்டீங்க..! விஜய் சேதுபதியை விளாசும் ரசிகர்கள்


தான் செய்யும் சிறு சிறு விஷயங்களிலும் ரசிகர்களை 'வாவ் வாட்ட மேன்!!' என வியப்பில் ஆழ்த்தி விடும் விஜய் சேதுபதி, 'அவென்ஜர்ஸ் எண்டு கேம்' திரைப்படத்தில் டப்பிங் பேசி சர்ச்சையில் சிக்கி இருக்கிறார்.

தான் உண்டு தமிழ் சினிமா உண்டு என, சிவனே என தன் வேலையை செய்து கொண்டிருந்த விஜய் சேதுபதியை, பிரபல மார்வெல் கதாபாத்திரத்திற்கு குரல் கொடுக்க வைத்து, ரசிகர்களின் அதிருப்தியை பெற வைத்திருக்கிறார்கள்.

Also Read | நாங்கல்லாம் அப்பவே அப்படி...! '30' வருடங்கள் கழித்து வைரலாகும் சிம்புவின் புகைப்படம் 

வருகிற ஏப்ரல் 26ம் தேதி வெளியாக இருக்கும், 'அவென்ஜர்ஸ் எண்ட் கேம்' எனும் உலக புகழ் பெற்ற ஹாலிவுட் திரைப்படத்தில், நடிகர் விஜய் சேதுபதி 'அயர்ன் மேன்' கதாபாத்திரத்திற்கும், நடிகை ஆண்ட்ரியா 'பிளாக் விடோ' கதாபாத்திரத்திற்கும் குரல் கொடுத்திருந்தனர்.

இவர்களது குரலில், இத்திரைப்படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாக, 'இவர்களின் குரல் குறிப்பிட்ட கதாபாத்திரங்களுக்கு பொருந்தவே இல்லை' என குற்றம் சாட்டி வருகின்றனர்,  இந்த சூப்பர் ஹீரோ திரைப்படத்தின் தீவிர ரசிகர்கள்.


இவர்கள் மட்டுமல்லாது, இத்திரைப்படத்திற்கு வசனம் எழுதிய A.R. முருகதாஸ், ஆந்தெம் வெளியிட்ட  A.R. ரஹ்மான் ஆகியோரும், ரசிகர்களின் விமர்சனங்களுக்கு ஆளாகி வருகின்றனர்.