Breaking News

விஜய்க்கு இருக்கும் பொறுமை ஏன் அஜித்துக்கு இல்லை...? பஞ்சாயத்தை கூட்டும் ரசிகர்கள்


லோக்சபா தேர்தலை தமிழகத்தில் கடந்த 18ம் தேதி நடைபெற்று முடிந்திருக்கும் சமயத்தில், 'திமுக'வா, 'அதிமுக'வா என்கிற பஞ்சாயத்து முடிந்து, விஜயா அஜித்தா என்கிற வழக்கமான பஞ்சாயத்தை கையில் எடுத்து இருக்கின்றனர் தல, தளபதி ரசிகர்கள்.

தேர்தல் தினத்தன்று தங்களது வாக்கினை தவறாது அளித்து ஜனநாகயாக கடைமையை  ஆற்றி இருந்தனர் நடிகர்கள் விஜய் மற்றும் அஜித்.

இருவர் வாக்களிக்கும் காணொளிகள் வழக்கம் போல இணையத்தில் வெளியாகியும் இருந்தது. அவற்றுள் நடிகர் விஜய் ஆராவாரம் ஏதும் இன்றி மிகவும் அமைதியாக வாக்களித்து சென்றதும், அஜித்தோ ரசிகர்கள் கூட்டம் கூடியதால் அவசர அவசரமாக வாக்களித்து சென்றதையும் பார்க்க முடிந்தது.

பிறருக்கு இடையூறு ஏற்பட்டுவிடக்கூடாது எனும் காரணத்திற்காக,வரிசையில் நிற்காமல் அவர் வாக்களித்து சென்றாலும், வழக்கம் போல ரசிகர்கள் சிலர், அஜித்தின் இந்த நடவடிக்கையையும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.