Breaking News

குடித்துவிட்டு போலீசிடம் ரகளை..! பெருமையாக சொல்லி சர்ச்சையில் சிக்கிய நடிகர்


திரையில் மக்களை காக்கும் மகான்களாக நடிக்கும் நடிகர்களில் பெரும்பாலானோர், சனி கிழமை இரவு ஆனாலே குடி கும்மாளம் என கிளப்புகளை நோக்கி படை எடுப்பவர்கள்தான்.

பிக்பாஸ் காயத்ரி துவங்கி, ஜெய், அருண்விஜய் என குடித்து விட்டு விபத்துக்களை ஏற்படுத்தி பரபரப்பை கிளப்பியவர்கள்தான். இப்படி இருக்க குடித்து விட்டு போலீசை கலாய்த்த அனுபவத்தை, பெருமையாக கூறி சர்ச்சையில் சிக்கி இருக்கிறார்.

மங்காத்தா, கோவா, அரண்மனை-2 போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் வைபவ். இவரது நடிப்பில் R.K. நகர் திரைப்படமும் விரைவில் வெளியாக இருக்கிறது.

இத்திரைப்படத்தை விளம்பரப்படுத்தும் விதமாக நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்ட இவர், குடித்து விட்டு வாகனம் ஓட்டி சிக்கியதை குறித்து பேசி இருந்தார்.

அதில் ஒருமுறை, பார்ட்டிக்கு சென்றுவிட்டு டிரைவர் இல்லாத காரணத்தினால் போதையிலேயே வாகனம் ஓட்டிவந்ததாகவும், இதனால் போலீஸ் அதிகாரிகள் மடக்கி பிடித்து, 4000 ரூபாய் அபராதம் கேட்க, 'போன முறை 2000 ரூபாய் தானே அபராதம் காட்டினேன்' எனக்கூறி போலீசாரையே கடுப்பேற்றிய சம்பவத்தை நகைச்சுவையாக கூறி, ரசிகர்களின் விமர்சனதிற்கு ஆளாகி இருக்கிறார்.