Thursday, 11 April 2019

ஹீரோவும் அவர் தான், வில்லனும் அவர் தான்... 'தளபதி 63'ல் காத்திருக்கும் டபுள் ட்ரீட்


விஜய்-அட்லீ கூட்டணியில் உருவாகிவரும் மூன்றாவது திரைப்படமான தளபதி63 யிலும் நடிகர் விஜய் இரட்டை வேடத்தில் நடிக்க இருப்பதாக ஒரு தகவல் கசிந்துள்ளது.

முன்னதாக அட்லீ இயக்கத்தில் உருவான, மெர்சல் திரைப்படத்தில் மூன்று வேடங்களில் தோன்றி ரசிகர்களுக்கு ட்ரிபிள் சந்தோசத்தினையும் அதிரடியையும் வழங்கி இருந்தார் விஜய்.

இந்நிலையில், இவர்கள் கூட்டணியில் உருவாகி வரும் 'தளபதி 63' திரைப்படத்தில், கால்பந்தாட்டத்தை விரும்பும் 'ஏரியா டான்' கதாபாத்திரம் ஒன்றும் உள்ளதாம். கதைப்படி மிகவும் வலுவான ஒன்றாக இந்த கதாபாத்திரம் அமைந்துள்ள நிலையில், 'அதிலும் நானே நடிக்கிறேன்' என அட்லீயிடம் வேண்டுகோள் விடுத்திருக்கிறார் விஜய்.

இதனால் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தாலும் சற்று குழம்பி போயும் இருக்கிறாராம் அட்லீ. ஏனென்றால் குறிப்பிட்ட கதாபாத்திரம்தான் வில்லனாக கதையில் பயணிக்கும் எனும் நிலையில்,' நடிகர் விஜயை அப்படியொரு நெகட்டிவ் கதாபாத்திரத்தில் ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்களா?' என படுதீவிரமான கலந்துரையாடல்கள் படக்குழுவினரிடையே  நிகழ்ந்து கொண்டிருக்கிறதாம்.

Disqus Comments
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();