Breaking News

காதலுக்காக மதம் மாறிய 4 தமிழ் நடிகைகள்..! கடைசி நடிகையை பார்த்தால் ஷாக் ஆகிடுவீங்க

தனது துணைக்காக எப்பேற்பட்ட செயலையும் செய்ய துணிய வைக்கும் சக்தி காதலுக்கு உண்டு. இதற்கு சினிமா பிரபலங்கள் மட்டும் விதி விலக்கல்ல. இப்படி காதலுக்காக தங்களது மதத்தையே மாற்றி கொண்ட தமிழ் நடிகைகளின் லிஸ்ட் இதோ.

குஷ்பு


90களிலேயே மிகப்பெரும் ரசிக படையையே கொண்டு, முன்னணி நடிகையாக வலம்வந்தவர் குஷ்பு. பிறப்பால் முஸ்லிம் மதத்தை சேர்ந்தவராக இருந்தாலும், இயக்குனர் சுந்தர் C யை காதலித்து மணந்த போது இந்து மதத்திற்கு மாறிவிட்டார்.

நயன்தாரா 


மலையாளி சிரிய கிறிஸ்துவ பெற்றோருக்கு பிறந்தவரான நடிகை நயன்தாரா, பிரபுதேவுடனான காதலின் போது இந்து மதத்திற்கு மாறி இருந்தார். ஆனால் துரதிஷ்ட வசமாக அந்த காதல் நிலைக்கவில்லை.


மோனிகா


குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, சிலந்தி உள்ளிட்ட ஒரு சில தமிழ் திரைப்படங்களில் நாயகியாக நடித்தவர் மோனிகா. இஸ்லாமிய மதத்தை சார்ந்த தொழிலதிபரை காதலித்து திருமணம் செய்த போது, தானும் அம்மதத்தை தழுவி தன் பெயரை ரெஹிமா என மாற்றிக்கொண்டார்.

நக்மா  


தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் என பல்வேறு மொழிகளில் பிரபலமான நக்மா.இந்து தந்தைக்கும், இஸ்லாமிய தாய்க்கும் பிறந்தவர். ஆனால் தொழிலதிபர் ஒருவருடனான காதலின் போது, இந்த இரண்டு மதங்களுமின்றி கிறிஸ்துவ மதத்தை தழுவி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருந்தார்.