Breaking News

திருமணமான நடிகர்களுடன் காதல்..! சர்ச்சையில் சிக்கிய 5 தமிழ் நடிகைகள்

சினிமா துறையில் எப்பொழுதும் இந்த காதல் கிசு கிசுக்களுக்கு பஞ்சம் இருந்ததே இல்லை. இப்படிப்பட்ட கிசுகிசுக்கள் முன்பு பல நடிகைகளின் மார்க்கெட்டையே காலி செய்திருந்தாலும், இன்று அந்த கிசு கிசுக்களே விளம்பரமாக பயன்படுத்த படுகின்றன.

அப்படி திருமணமான நடிகர்களை காதலிப்பதாக சர்ச்சையில் சிக்கிய டாப் 5 நாயகிகள் இதோ.

அமலாபால்


தமிழ்  திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம்வரும் நடிகை அமலாபால், சுஜி லீக்ஸ் சர்ச்சையின் போது நடிகர் தனுஸுடன் நெருக்கமாக இருக்கும் வீடியோக்கள் வெளியாக இருப்பதாக சர்ச்சைகள் கிளம்பியது. தொடர்ந்து இயக்குனர் A.L விஜயை மணந்து கொண்டாலும், இந்த கிசு கிசுவின் காரணமாக அவர்கள் விவாகரத்து செய்து கொண்டதாகவும் ஒரு பேச்சு அடிபடுகிறது.

திரிஷா  


15 வருடங்களை கடந்து தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத ஒருவராக வலம்வரும் நடிகை திரிஷாவும், தனுஷ் உடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் சுஜி லீக்ஸ் சர்ச்சையின் போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

கீர்த்தி சுரேஷ்


இளம் நடிகைகளில் முன்னணி நடிகையாக வலம்வரும் கீர்த்தி சுரேஷும், நடிகர் தனுஷ் உடன் 'தொடரி' படப்பிடிப்பின் போது காதல் வசப்பட்டதாக, பரபரப்பு கிளம்பி இருந்தது.

தமன்னா 


பெரும்பாலும் சர்ச்சைகளில் இருந்து விலகியே இருக்கும் நடிகை தமன்னா, கார்த்தி இடையே பையா திரைப்பட சமயத்தில் காதல் வதந்திகள் தீவிரமாக பரவியது. பின்னர் கார்த்தி ரஞ்சினி என்பவரை திருமணம் செய்து வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். இருப்பினும், தோழா படத்தில் இணைந்த இவர்களுக்கிடையே, மீண்டும் காதல் துளிர்விட்டதாக அதிகம் கிசு கிசுக்கப்பட்டது.

நயன்தாரா 


நடன இயக்குனர், நடிகர், இயக்குனர் என பன்முகங்களை கொண்ட பிரபுதேவாவை, லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா வில்லு திரைப்பட படப்பிடிப்பின் போது காதலிக்க துவங்கியதும், மனைவி லதாவை விவாகரத்து செய்யாமலேயே, பிரபுதேவாவும் நயன்தாராவுடன் குடும்பம் நடத்தியதும் தலைப்பு செய்திகளில் வெளியான தகவல்.