Breaking News

"சூப்பர் ஸ்டாருக்காக என்னை ஏமாத்திட்டாங்களே" - வருத்தத்தில் சூர்யா


நடிகர் சூர்யாவின் 'காப்பான்' திரைப்பட ரிலீஸ் குறித்து கண்டுகொள்ளாத தயாரிப்பு நிறுவனத்தால் நடிகர் சூர்யா வருத்தத்தில் இருப்பதாக பேசப்பட்டு வருகிறது.

K.V.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா, ஆர்யா, சாயீஷா, நடிக்கும் திரைப்படம் காப்பான். இத்திரைப்படத்தின் படப்பிடிப்புகள் பல மாதங்களுக்கு முன்னதாகவே நிறைவடைந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது.

என்றாலும், இத்திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா புரொடக்சன்ஸ் ரிலீசுக்கான எந்த வித முயற்சியையும் எடுக்காமல், சூப்பர் ஸ்டாரின் தர்பார் திரைப்பட படப்பிடிப்பில் கவனம் செலுத்து துவங்கி விட்டதாம்.

ஏற்கனவே தீபாவளிக்கு வெளியாக வேண்டிய தனது, NGK திரைப்படமும் காத்திருப்போம்... காத்திருப்போம் என கூறி ஓவராக காத்திருக்க வைத்து விட்ட டென்ஷனில் இருந்த சூர்யா, காப்பானும் தள்ளி போவதை எண்ணி மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாகி இருக்கின்றாராம்.