Breaking News

"என் ஓட்டு இவருக்குத்தான்" வெளிப்படையாய் சொன்ன நடிகை ஸ்ருதிஹாசன்..!


தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம்வந்து, இன்று மார்க்கெட் போய் தவித்து கொண்டிருக்கும் நடிகை ஸ்ருதிஹாசன். வருகிற ஏப்ரல் 18ம் தேதி நடைபெற இருக்கும் தேர்தல், தமிழகத்தையே பரபரப்பாக்கி இருக்கும் நிலையில், இவரும் தேர்தல் குறித்து பதிவிட்டு பரபரப்பை கிளப்பி இருக்கிறார்.

தன் தந்தையும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான நடிகர் கமலஹாசன், ஸ்டாலின், விஜயகாந்த், H.ராஜா ஆகியோர் பேசுவதை பார்த்து கடுப்பாகி டிவியை உடைப்பது போன்ற தேர்தல் பிரச்சார வீடியோ ஒன்றினை வெளியிட்டு இருந்தார்.

இதற்கு இளம் ரசிகர்கள், சினிமா துறையினரிடையே நல்ல வரவேற்பு கிடைத்திருந்த நிலையில், ஸ்ருதி ஹாசனும் பாராட்டி,'வாழ்த்துக்கள் அப்பா, என் ஓட்டு எப்பொழுதும் உங்களுக்குத்தான் என வெளிப்படையாக பதிவிட்டிருக்கிறார்.