Breaking News

சந்தானம் உடன் மோதலா.? உண்மையை சொன்ன சிவகார்த்திகேயன்!!!


திரைத்துறையில் ஒரு நடிகர் இருக்கிறார் என்றால் அவருக்கு போட்டியாக இன்னொருவரை நிறுத்தி, இருவருக்கும் இடையே போட்டா போட்டியை உருவாக்கி விடுவது தமிழ் சினிமா ரசிகர்களின்  வழக்கம்.

எம்ஜிஆர் - சிவாஜி, ரஜினி - கமல்,  அஜித் - விஜய், என தலைமுறை தலைமுறையாக சென்று கொண்டிருக்கும் இந்த ரசிக யுத்தத்திற்க்கு இடையே, சிவகார்த்திகேயன் - சந்தானம் எனவும் ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு கிளம்பி இருந்தனர் ரசிகர்கள்.

திரைத்துறையினரும், தனக்கு பின்னால் விஜய் டிவியில் இருந்து வந்த, சிவகார்த்தியேன் நாயகனானதை பொறுத்துக்கொள்ள முடியாமலே  நாயானாக சந்தானம் நடிக்க ஆரம்பித்ததாகவும் பேசிக்கொண்டனர்.

Also Read | பார்க்கவே பரிதாபமான தோற்றத்தில் சந்தானம்..! உடல் நிலை பாதிப்பா? ரசிகர்கள் அதிர்ச்சி!! 

இப்படி இருக்க சந்தானம் குறித்த தனது மனநிலையை முதன் முதலாக வெளிப்படுத்தி இருக்கிறார் நடிகர் சிவகார்த்திகேயன், அண்மையில் சந்தானம் நடிப்பில் வெளியான 'தில்லுக்கு துட்டு-2' திரைப்படத்தினை பார்த்த அவர்,

அதில் இடம்பெற்ற ஒவ்வொரு காட்சிகளையும் குறிப்பிட்டு பாராட்டியதாகவும், ஏன் 'தனது பேவரைட் நகைச்சுவை நடிகர்களில் ஒருவர் சந்தானம்' எனவும் புகழ்ந்ததாகவும் இயக்குனர் ராஜேஷ் தெரிவித்து, இவர்களுக்கிடையேயான சண்டை குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.