Friday, 26 April 2019

ஷேவ் மட்டும் பண்ணிட்டு, 'ஸ்லிம் ஆகிட்டேனு' சொன்னா எப்படி.? சிம்புவை கலாய்க்கும் நெட்டிசன்கள்


எழுத்து, இயக்கம், இசையமைப்பு, நடனம், நடிப்பு, சர்ச்சை என சினிமாவில் அனைத்து துறைகளிலும் கலக்கி வருபவர் நடிகர் சிம்பு.

'அன்பானவன் அடங்காதவன் அசாராதவன்' திரைப்பட பிரச்சனைக்கு பிறகு மீண்டும் திரையுலகில் பிசியாகி இருக்கும் இவரது, உடல் எடை குறித்த விமர்சனங்கள் 'வந்தா ராஜாவாதான் வருவேன்' திரைப்படத்திற்கு பின்பு அதிகரிக்க துவங்கியது.

இதனால் உடல் எடையை குறைப்பது என முடிவெடுத்து ஒரு மாதகாலம் உடற்பயிற்சிக்கு என செலவளித்திருந்தார் சிம்பு. இதனால் மீண்டும் விண்ணை தாண்டி வருவாயா திரைப்படத்தில் பார்த்த சிம்புவை பார்க்கலாம் என ஆவலோடு காத்திருந்தனர் ரசிகர்கள்.

ஆனால் அவரது சமீபத்திய புகைப்படத்தை பார்த்த ரசிகர்களுக்கோ அதிர்ச்சி, ஏனென்றால் இந்த ஒருமாத காலம் உடற்பயிற்சிக்கு பின்பும் சிம்புவின் உடல் எடையில் பெரிய மாற்றங்கள் ஏதும் இல்லை.

என்றாலும் சிம்பு ஒல்லியாகிவிட்டார் என ரசிகர்கள் தொடர்ந்து பதிவிட்டு வரும் நிலையில், குசும்பு காரா நெட்டிசன்களோ, 'ஷேவ் மட்டும் செய்து விட்டு வந்து ஸ்லிம் ஆகிட்டேனு சொன்னா எப்படி?' என சகட்டு மேனிக்கு கிண்டல் அடித்து வருகின்றனர்.



Disqus Comments
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();