Breaking News

நிறைமாத கர்ப்பிணி வயிற்றுடன் நீச்சல் உடையில் போஸ்...! வைரலாகும் சமீரா ரெட்டியின் புகைப்படம்


'வாரணம் ஆயிரம்' திரைப்படத்தில் படு ஹோம்லியான பெண்ணாக நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் சமீரா ரெட்டி. ஆனால் நிஜ வாழ்வில் படு மாடர்னான பெண்மணியான இவர், பல சர்ச்சையான திரைப்படங்களிலும் நடித்து இருக்கிறார்.

கடந்த 2014ம் ஆண்டு, அக்சய் வர்டே எனும் தொழிலதிபரை மணந்த இவர், தற்பொழுது இரண்டாவது குழந்தை பெரும் தருவாயில் இருக்கிறார். விரைவில் குழந்தை பிறந்துவிடும் எனும் நிலையில், நிறைமாத கர்ப்பிணி வயிற்றுடன் தென்படும் இவர், இப்பொழுதும்  கவர்ச்சி உடைகளை அணிந்து சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்.

எனினும், ரசிகர்களின் எதிர்மறை கருத்துக்கள் குறித்து கவலைப்படாத இவர், தொடர்ந்து அந்த புகைப்படங்களை தனது சமூக வலைதளபக்கங்களில் பகிர்ந்து வருகிறார். இந்த வரிசையில் தற்பொழுது, நீச்சல் உடையில் நீச்சல் குளத்தில் மிதக்கும் புகைப்படத்தினையும் வெளியிட்டு சர்ச்சை தீயில் எண்ணையை ஊற்றி இருக்கிறார்.