Breaking News

கட்டுமஸ்தான உடலை காட்டி கவரும் சமந்தா..! லைக்ஸ் அள்ளும் சிக்ஸ் பேக்ஸ் புகைப்படம்


முன்பெல்லாம் திரைத்துறையில் உடலை கட்டுமஸ்தாக வைத்துக்கொள்ள நடிகர்கள்தான் அவஸ்தை படுவார்கள். சிக்ஸ் பேக்ஸ் வைப்பது தான் ட்ரெண்ட் என முன்னணி நடிகர்கள் போட்டி போட்டு சிக்ஸ் பேக்ஸ் வைத்த காலம் போய், தற்பொழுது நடிகைகள் இப்படிப்பட்ட விஷயங்களில் கவனம் செலுத்த துவங்கியுள்ளனர்.

 நடிகைகள் பார்க்க கொழுக் மொழுக் என இருந்தால் மட்டும் போதும் என்று படக்குழுவினர் நினைத்து கொண்டிருந்தது போய், ரசிகர்களின் ரசனைக்கு ஏற்ப நடிகைகளையும் சிக்ஸ் பேக்ஸ் வைக்க வேண்டிய சூழலுக்கு தள்ளி இருக்கிறது காலம்.  

பெரும்பாலான இளம் நடிகைகள் ரசிகர்களின் இந்த விருப்பத்தை நிறைவேற்றும் பொருட்டு ஜிம்மே கதி என கிடக்கிறார்கள். தமன்னா, ராய் லட்சுமி, அஞ்சலி ஆகியோரை தொடர்ந்து, புதுப்பெண்ணான நடிகை சமந்தாவும் பிட்னெஸ்ஸில் மிகுந்த கவனம் செலுத்த துவங்கியுள்ளார்.

மேலும் ரசிகர்களுக்கும் அப்படியே விருந்தளிக்க தான் உடற்பயிற்சி செய்யும் புகைப்படங்களை வெளியிட்டு வரும் அவர், சிக்ஸ் பேக்ஸ் இடையுடன் தோன்றி இருந்த புகைப்படத்தையும் சமீபத்தில் பகிர்ந்து ரசிகர்களை குதூகலிக்க செய்திருக்கிறார்.