Breaking News

'நயன்தாரா' பட விளம்பரத்திற்காகவே 'ராதாரவி'யை சிக்க வைத்தனர்.. பிரபல இயக்குனர் குற்றச்சாட்டு


'கொலையுதிர் காலம்' திரைப்பட  பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில், நயன்தாரா குறித்த ராதாரவியின் பேச்சு கடும் விமர்சனத்துக்கு ஆளானது. இந்நிலையில் இந்த சம்பவத்தின் பின்னணியில் இருந்த காரணம் குறித்து பிரபல திரைப்பட இயக்குனர் பிரவீன்காந்த் பகிரங்க குற்றச்சாட்டினை வைத்திருக்கிறார்.    

இது குறித்து நேர்காணல் ஒன்றில் பேசி இருந்த அவர், மேடையில் எப்பொழுதும் கேலி கிண்டல் என கலகலப்பாக பேசுபவர் நடிகர் ராதாரவி. அவரது பேச்சை கேட்க பத்திரிக்கையாளர்களே ஆவலுடன் காத்துக்கிடப்பார்கள்.


அன்று மேடையில் அவர் பேசியிருந்ததும் அவ்வாறு தான். அவர் நயன்தாராவை கூப்பிட்டால் செல்பவர் என்ற அர்த்தத்தில் பிறர் கிளப்பிவிட்டது போல பேசவில்லை, 'கையெடுத்து கும்பிடுவது, கைதட்டி கூப்பிடுவது' என காலகாலமாக பேசப்பட்டு வரும் வார்த்தையை தான் அவர் பயன்படுத்தினார்.

ஆனால், நயன்தாரா நடிப்பில் வெளியாக இருந்த ஐரா திரைப்பட விளம்பரத்திற்காக அதனை அவர் தவறாக கூறியதாக பெரிதாகிவிட்டதாக நான் நினைக்கிறேன். இதற்கு குவிந்த கண்டனங்களை கண்டு, தான் பேசியது தவறாக புரிந்துகொள்ளப்பட்டதை எண்ணி அவரும் வருந்தினார்' என தெரிவித்து இருந்தார்.