Breaking News

'பாஜக'வின் தயவில் உருவாகும் 'இந்தியன்-2'..? மக்கள் நீதி மய்யத்துக்கு வந்த சோதனை


பிரம்மாண்டத்தின் அடையாளம் 'ஷங்கர்' இயக்கத்தில், 'இந்தியன் 2' எனும் திரைப்பட அறிவிப்பும், அதன் பின்னர் ஏற்பட்ட தாமதங்களும் நாம் அறிந்த ஒன்று.

'கமல் சரிப்பட்டு வந்தால், ஷங்கர் பிரச்சனை செய்வது, ஷங்கர் சுமூகத்திற்கு வந்தால் தயாரிப்பு நிறுவனமான 'லைகா' குடைச்சல் கொடுப்பது' என நடந்து வரும் இழுபறிகளால் 'படம் வருமா?' என்ற கேள்வி ரசிகர்களிடையேயும் திரைத்துறையினரிடமும் எழுந்துள்ளது.  

இப்படி ஒரு நிலையில் 'பாஜக' மனசு வச்சா 'இந்தியன்-2' உருவாகும் எனும் முட்டுச்சந்தில் நின்று கொண்டிருக்கிறாராம் இயக்குனர் ஷங்கர்.

அதாவது 'அரசியலில் கவனம் செலுத்தி படப்பிடிப்புக்கு வராத நடிகர் கமலையும், திட்டமிட்டதை விட எக்கச்சக்கமாக செலவு இழுத்து வைக்கும் ஷங்கரையும் வைத்து படம் இயக்கினால், நம்ம கதி அதோகதிதான்' என எண்ணிய லைகா நிறுவனம், இந்தியன்-2 திரைப்படத்தை கைவிடும் முடிவை எடுத்து விட்டதாம்.

இதனால் இப்படியொரு மெகா பட்ஜெட் படத்தை, லைகா நிறுவனத்தை தவிர தயாரிக்க தமிழ் சினிமாவில் வேறு எவரும் இல்லை எனும் பட்ஜத்தில், பிரபல வட இந்திய நிறுவனமான ரிலையன்ஸை அணுகி இருக்கிறார் ஷங்கர்.

தற்பொழுது, மத்தியில் ஆளும் கட்சியான 'பாஜக'வின் விஸ்வாசியான அந்நிறுவனமும், H.ராஜாவின் பேச்சை கேட்டு கமல் டிவியை உடைத்து போல,  ஆளும் கட்சிக்கு எதிரான சர்ச்சை காட்சிகள் உள்ளனவா என்பதை உறுதி செய்து கொள்ள, 'அத்திரைப்படத்தின் ஸ்க்ரிப்டை பார்த்த பிறகே தயாரிப்பதா இல்லையா என முடிவு செய்வோம்' என்று கறாராக சொல்லிவிட்டதாம்.

அதாவது இனி இந்தியன்-2 உருவாகுவது பாஜகவின் கையில்!!!