Breaking News

தனுஷிற்கே மிரட்டல் விடுத்த தனுஷ் ரசிகர்கள்.. வைரலாகும் போஸ்டர்


நடிகர் தனுஸின் ரசிகர் மன்றத்தில் இருந்து ரசிகர்கள் சிலர் நீக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கே மிரட்டல் விடுத்து ரசிகர்கள் ஒட்டியுள்ள போஸ்டர் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில், நாயகன் ஆவதற்கான உடல்வாகோ, அழகோ இல்லாமல் ரசிகர்களை தன்னை ஹீரோவாக ஏற்றுக்கொள்ள வைத்து, ஹாலிவுட்டில் நடிக்கும் அளவிற்கு வளர்ந்து இருப்பவர் தனுஸ். இந்த வளர்ச்சிக்கு ரசிகர்களின் பங்கும் குறிப்பிடப்பட வேண்டிய ஒன்று.

இந்நிலையில், திருவாரூரை சேர்ந்த அவரது ரசிகர்கள் சிலர், அரசியல் குறித்த வசனங்களோடு அனுமதி இன்றி தனுஸ் போஸ்டரை ஒட்டியதால், ரசிகர் மன்றத்திலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டு இருந்தனர்.  

இதற்கு கண்டனம் தெரிவிக்கும் விதத்தில், சென்னையில் உள்ள நடிகர் தனுஸ் அலுவலகத்திற்கு முன்பாக குறிப்பிட்ட ரசிகர்கள் மிரட்டல் விடுத்தது போஸ்டர் ஒன்றினை ஒட்டியிருக்கின்றனர். அதன் புகைப்படங்கள் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.