Breaking News

அட்லீயை கண்டாலே கொதிக்கும் சிவகார்த்திகேயன்!!! நெருங்கிய நண்பர்கள் அங்காளி பங்காளியான கதை


நெருங்கிய நண்பர்களாக இருந்த இயக்குனர் அட்லீ மற்றும் சிவகார்த்திகேயனை அங்காளி பங்காளி ஆக்கிய பஞ்சாயத்து குறித்த தகவல் வெளிவந்துள்ளது.

டிவி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி, சிறு சிறு வேடங்களில் தோன்றி நடித்த 10 படங்களிலேயே, அஜித், விஜய்க்கு அடுத்த இடத்தை பிடித்துவிட்ட நடிகர் சிவகார்த்திகேயன்.

முன்னணி நடிக்கராவதற்கு முன்பு இருந்தே, சிவகார்த்திகேயனுக்கு இயக்குனர் அட்லீ நெருங்கிய நண்பர்.  சொல்லப்போனால், அட்லீயின் இயக்கத்தில் சிவா குறும்படம் ஒன்றில் கூட நடித்து இருக்கிறார்.

இருவருமே ஒரு திருப்பு முனைக்காக காத்துக்கொண்டிருந்த அந்த சமயத்தில், 'நான் நடிகராகி விட்டால், உன் இயக்கத்தில் நடிக்கிறேன். எனக்கு தயாரிப்பாளர் கிடைத்துவிட்டால் உன்னை ஹீரோவாக்குகிறேன்' என ஒருவருக்கொருவர் வாக்களித்து கொண்டிருக்கின்றனர்.

இவர்களுள் அட்லீக்கு 'ராஜா ராணி' திரைப்படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைக்க, சொல்லிவைத்திருந்ததை போல, 'தான்தான் நாயகன்' என சிவகார்த்திகேயன் கனவு கோட்டையை கட்ட, அட்லீயோ அவரை கழட்டி விட்டுவிட்டு ஆர்யாவை நாயகனாக்கி விட்டாராம்.

இதனால் அன்று முறிந்த நட்பு இன்று வரை ஒட்டவே இல்லை. என்றாலும் சினிமா வழக்கப்படி உள்ளே அடித்து கொண்டாலும் வெளியே அனைத்து கொள்ளும் இவர்கள் இன்றும் நட்பாக இருப்பதை போல வெளியே நடந்து கொள்கிறார்கள் என்கிறது சினிமா வட்டாரங்கள்.