Breaking News

ஷாருக்கானை IPLல் மடக்கிய அட்லீ... வெளியான உண்மை காரணம்


இயக்குனர் அட்லீ, ஷாருக்கானை சென்னை-கொல்கட்டா அணிகளுக்கிடையேயான ஐபிஎல் போட்டியின் போது திடீரென சந்தித்தார். இதனால் தளபதி 63 படத்தில் ஷாருக்கான் நடிக்க இருப்பதாக ஒரு வதந்தி பரவி வரும் நிலையில், இந்த சந்திப்பு குறித்த மற்றொரு தகவலும் தமிழ் திரையுலகில் வலம்வருகிறது.

சில நாட்களுக்கு முன்பு அட்லீ, தளபதி 63 தயாரிப்பு நிறுவன நிர்வாகிகள் என ஒரே நாளில், நடிகர் ஷாருக் கான் அவர்களது ட்விட்டர் பக்கத்தை பின்தொடர்ந்து, 'தளபதி 63' படத்தில் அவர் நடிக்க இருக்கிறாரோ? என ரசிகர்களை சந்தேகிக்க வைத்தனர்.


இந்நிலையில், ஷாருக்கான் உடனான இந்த திடீர் சந்திப்பு, குறிப்பிட்ட வதந்தியை வலுவாக்கி உள்ளது. இது ஒருபுறம் இருந்தாலும், அட்லீ இயக்கத்தில் உருவாகி சக்கை போடு போட்ட மெர்சல் திரைப்படத்தை, ஹிந்தியில் ரீமேக் செய்ய இருப்பதாகவும், அதில் ஷாருக் கான் அவர்களை நடிக்க வைக்க அட்லீ முயற்சி செய்து வருவதே இந்த நிகழ்வுகளுக்கான காரணம் எனவும் கிசுகிசுகிறது சினிமா வட்டாரங்கள்.

அப்போ...!!!! ஆளப்போறான் ஹிந்திவாலா உலகம் எல்லாமே..!!! வா???