Breaking News

ஹனிமூனை என்ஜாய் செய்யும் 'ஆர்யா-சாயீசா'... ஜோடியாக வெளியான முதல் புகைப்படம்


புதுமண தம்பதியர்களான நடிகர் ஆர்யா மற்றும் நடிகை சாயீஷா, ஹனிமூனில் ஜோடியாக சுற்றும் புகைப்படத்தை முதன் முறையாக வெளியிட்டு இருக்கின்றனர்.

தமிழ் சினிமாவின் பிளே பாய் நடிகர் என அழைக்கப்படும் நடிகர் ஆர்யா, இளம் நடிகையான சாயீஷாவை சிலவாரங்களுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டு அதிர்ச்சியில் ஆழ்த்தி இருந்தார். இதற்கு முன்னதாக திருமணம் என சொல்லிவிட்டு அவர் டிமிக்கி கொடுத்திருந்த சம்பவங்கள்தான் இந்த அதிர்ச்சிக்கு காரணம்.

முன்னதாக நாயகிகளுடன் டேட்டிங் செல்ல வெளிநாடு சுற்றிவந்த நடிகர் ஆர்யா, இப்பொழுது தன் அதிகாரபூர்வ மனைவியுடன் ஹனிமூனுக்காகா வெளிநாடு சுற்றி வருகிறார்.

மேலும் படிக்க | திருமணத்திற்கு முன்பே கர்ப்பம்... அதிகாரப்பூர்வாமாக அறிவித்த எமி ஜாக்சன்

பெரும்பாலும் இப்படி ஹனிமூன் செல்லும் நட்சத்திர தம்பதிகள், சமூக வலைத்தளங்களில்  புகைப்படங்களாக வெளியிட்டு தள்ளுவர். ஆனால் நடிகர் ஆர்யாவோ, இது குறித்து எந்த வித சமூகவலைத்தள பதிவும் வெளியிடவில்லை. நடிகை சாயீசா மட்டும் தான் சிங்கிளாக இருக்கும் ஒரு புகைப்படத்தினை பகிர்ந்து இருந்தார்.   

இந்நிலையில் முதன் முறையாக, ஆர்யா மற்றும் சாயீஷா ஹனிமூனில் ஜோடியாக இருக்கும் புகைப்படமே வெளியாகியுள்ளது. கழுத்தில் மாலையுடன் ஆர்யாவும், குடும்ப பெண்ணாக சேலையில் சாயீஷாவும் தோன்றி இருக்கும் அந்த புகைப்படம் தான் சமூக வலைத்தளங்களில் இப்பொழுது ட்ரெண்டிங்.