Breaking News

நடிகை ஆண்ட்ரியாவுக்கு இப்படியொரு திறமையா..? விஜய் ஆண்டனி வெளியிட்ட வியக்க வைக்கும் தகவல்


திரைத்துறையில் உள்ள பல நடிகர், நடிகைகள் நடிப்பு மட்டுமல்லாது பிற துறைகளிலும் திறமை வாய்ந்தவர்களாக உள்ளனர். உதாரணத்திற்கு நடிகர் அஜித்தை எடுத்து கொண்டால், கார், பைக் ரேஸிங், ஏரோ மாடலிங், விமானம் ஓட்டும் திறமை என அடுக்கி கொண்டே போகலாம்.

இப்படி நடிகர் அஜித்தை போலவே, நடிகைகளில் அசாத்திய திறமை கொண்டவர் ஆண்ட்ரியா. நடிகையாவதற்கு முன்னதாகவே தேர்ந்த பாடகியான இவருக்கு இருக்கும் குறிப்பிட்ட திறமையை குறித்து இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி அவர்கள் பேசி இருந்தார்.

ஆண்ட்ரியா நடிப்பில் வெளியாகவுள்ள, மாளிகை திரைப்பட டீசர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட விஜய் ஆண்டனி, 'ஒரு பாடகியாக மட்டும் இல்லாமல், வித்யாசமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து தமிழ் சினிமாவில், நல்ல நடிகையாகவும் வளர்ந்து இருக்கிறார்.

மேலும் இவருக்கு ஆண்களை போல குரலை மாற்றி பாடும் திறமையும் உண்டு, இப்படி பட்ட திறமை இந்திய சினிமாவிலேயே இவர் ஒருவருக்குத்தான் இருக்கிறது என நினைக்கிறேன்' என பாராட்டி பேசி இருந்தார்.

பல டிவி நிகழ்ச்சிகளில் ஆண்கள், பெண்ணை போல குரலை மாற்றி பாடுவதை பார்த்திருப்போம், ஆனால் மிக மெல்லிய குரலை கொண்ட பெண்கள் ஆண்களை போல பாடி பார்ப்பதென்பது மிக அரிதான ஒன்று. எனவே விஜய் ஆண்டனி கூறியதை போலவே, மிகவும் அசாத்திய திறமை படைத்தவர் ஆண்ட்ரியா என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.