Breaking News

நள்ளிரவில் ரொமான்டிக் குளியல்..! போட்டோ போட்டு கலாய் வாங்கிய அமலாபால்


மார்க்கெட் போன சமயங்களில் ரசிகர்களும், திரையுலகினரும் தங்களை மறந்து விடாமல் இருக்க, நடிகைகள் கவர்ச்சி புகைப்படங்களை தொடர்ந்து வெளியிட்டு வருவது வழக்கம். அதே பாணியை கடைபிடித்து வரும் நடிகை அமலாபாலும், வித்தியாச வித்யாசமான புகைப்படங்களை வெளியிட்டு அவ்வப்போது சர்ச்சையில் சிக்கி வருகிறார்.

சில தினங்களுக்கு முன்பு தான், கடற்கரையில் அரைகுறை ஆடையுடன் சுற்றி திரியும் புகைப்படங்களை வெளியிட்டு, பரபரப்பாக பேசப்பட்டார்.


இந்நிலையில் தற்பொழுது நட்ட நடு ராத்திரியில், நீச்சல் குளத்தில் குளியல் போடும் புகைப்படம் ஒன்றினை வெளியிட்டு இருக்கிறார்.

நிலவு வெளிச்சத்தில், குளியலை போட்டு புத்துணர்வு பெற்றதை ரசிகர்களுடன் அவர் பகிர, படிக்காதவன் படத்தில் நடிகர் விவேக் நடித்திருந்த காமெடி காட்சியுடன் இதனை ஒப்பிட்டு கலாய்த்து இருக்கிறார் குறும்புக்கார நெட்டிசன் ஒருவர்.