Breaking News

'கார் ரேஸிங்கில் நான் அஜித்துக்கு சீனியர்'... 'அதிமுக' எம்எல்ஏ வெளியிட்ட சுவாரஸ்ய தகவல்


நடிகர் அஜித்தை பக்கா ஜென்டில் மேன் என புகழ்ந்திருக்கிறார் அதிமுக கட்சியின் எம்எல்ஏ தங்கவேல்.

திரைத்துறை மட்டுமல்லாது நடிகர் அஜித்தை அறிந்த ஒவ்வொருவரும் அவரது எளிமையை பற்றி புகழ்ந்து பேசாமல் இருக்க முடியாது. அந்த அளவிற்கு உச்சத்தில் இருந்தும், அனைவரிடமும் சமமாக பழகி வியக்க வைக்கிறார் அஜித்.

இந்நிலையில் பெரம்பூர் 'எம்எல்ஏ'வான வெற்றிவேல் அவர்கள், அஜித் குறித்து சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பேசி இருந்தார். அதில் தனக்கும், அஜித்துக்கும் பொதுவான கார் ரேஸிங் குறித்து பேசிய அவர், 'அஜித் கார் ரேஸிங்கில் தனது ஜுனியர் மற்றும் நல்ல நண்பர்' என்ற தகவலையும் பகிர்ந்து இருந்தார்.         

மேலும் அஜித்தை, அதிமுக கட்சிக்கு இழுக்கும் முயற்சிகள் குறித்தும் மறுப்பு தெரிவித்த அவர், நடிகர் அஜித் பக்கா ஜென்டில்மென் எனவும் புகழ்ந்து பேசி இருந்தார்.