Breaking News

A.L.விஜயுடன் திருமண சர்ச்சை..! வாய்விட்டு சிக்கிய சாய்பல்லவி


நடிகை அமலாபாலின் முன்னாள் கணவரும், இயக்குனருமான A.L விஜய் நடிகை சாய்பல்லவியை இரண்டாவது திருமணம் செய்ய இருப்பதாக சில வாரங்களுக்கு முன்பு ஒரு செய்தி தீயாய் பரவியது.

இதற்கு இயக்குனர் விஜயின் தரப்பு மறுப்பு தெரிவித்திருந்தாலும், 'நடிகை அமலாபாலை காதலிப்பது குறித்த செய்தி வெளியான போதும் இது போல் தான் மறுப்பு தெரிவித்தார். ஆனால் கடைசியில் உண்மையாக இருந்தது அல்லவா?' என பலர் நம்ப மறுத்தனர்.    

இப்படி தன்னை வைத்து மாபெரும் பூகம்பமே வெடித்து கொண்டிருக்கும் சமயத்தில், அதிகாரபூர்வ அறிவிப்போ விளக்கமோ அளிக்காமல் இருந்து வந்த சாய்பல்லவி, திடீரென A.L.விஜய் திரைப்படம் குறித்து வெளியான வேறொரு செய்திக்கு விளக்கம் அளித்திருக்கிறார்.

நடிகை கங்கனா ரௌனட் ஜெயலலிதாவாக நடிக்க, சாய்பல்லவி சசிகலாவாக நடிக்க இருப்பதாக வெளியான செய்திதான் அது. இது குறித்து விளக்கம் அளித்த சாய்பல்லவி, இயக்குனர் விஜய் தன்னை அணுகவே இல்லை. இது முற்றிலும் பொய் என பத்திரிக்கையாளர் ஒருவர் தொடர்பு கொண்ட போது பேசி இருந்தார்.

மேலும் அப்போது கூட, தனது திருமண சர்ச்சைகள் குறித்து அவர் வாய்திறக்கவே இல்லை. இது போன்ற வதந்திகளுக்கு பிரபலங்கள் பதிலளிக்கவில்லை என்றால் பெரும்பாலும் உண்மையாகவே இருந்துள்ள பட்சத்தில், சாய்பல்லவி திருமண விஷயமும் உண்மையாக இருக்கலாம் என்ற பேச்சு தற்பொழுது அடிப்பட துவங்கி இருக்கிறது.