Breaking News

அரசியலில் குதிக்கும் ராகவா லாரன்ஸ்..? சீமானுக்கு பகிரங்க எச்சரிக்கை!!!


நடன இயக்குனராக இருந்து, இன்று சினிமாவில் இயக்குனர், நடிகர் என மிகப்பெரும் பிரபலமாக உருவெடுத்து இருக்கிறார் ராகவா லாரன்ஸ். இவரது சமூக சேவைகளாலும் தமிழக மக்களின் மனதில் இடம்பிடித்துள்ள இவர், பிரபல அரசியல்வாதி ஒருவருக்கு கண்டனம் தெரிவித்து பதிவிட்டு இருக்கிறார்.

இது குறித்து சமீபத்தில் அவர் வெளியிட்ட சமூக வலைதள பதிவில், தன்னையும் தனது பொதுநல சேவைகளையும் வளர்ந்து வரும் அரசியல்வாதி ஒருவர் தரக்குறைவாக விமர்சனம் செய்ததாகவும், அவர் விட்டு விட்டாலும் அவரது தொண்டர்கள் இன்றும் கீழ்த்தரமான முறையில் தனது சமூக வலைதள பக்கங்களில் கருத்து தெரிவிப்பதாகவும் வருத்தம் தெரிவித்து இருக்கிறார்.

மேலும், தனது உதவி பெரும் உடல் ஊனமுற்ற நண்பர்கள் நடத்தும் நிகழ்ச்சிகளிலும் குறிப்பிட்ட அரசியல்வாதிகளின் தொண்டர்கள், தரக்குறைவாக பேசி அவர்களின் மனதை புண்படுத்துவதாகவும் பகிரங்க குற்றச்சாட்டு விதித்திருக்கிறார்.

அதுமட்டுமல்லாது, அரசியல் வாதியின் இந்த நடவடிக்கைகள், மக்களிடையே தனக்கு கிடைத்துள்ள செல்வாக்கை நினைத்து அவருக்கு வந்த பயத்தினால் நடைபெறுபவை என தனக்கு நெருங்கியவர்கள் கூறியிருந்ததையும் மேற்கோள் காட்டி இருந்த அவர், 'சவாலா? சமாதானமா?' இனி உங்கள் சாய்ஸ் என நேரடி எச்சரிக்கையையும் விடுத்து இருக்கிறார்.

அண்ணே நீங்க நம்ம சீமான் அவர்களை சொல்லலையயே?